இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டி : டெல்லி அணியிடம் சென்னை அணி தோல்வி

Oct 9 2015 8:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டத்தில், சென்னை அணியை ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் டெல்லி அணி தோற்கடித்தது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து 2-வது சீசனுக்கான போட்டிகள் சென்னை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன. டெல்லியில் நேற்று மாலை நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில், டெல்லி டைனமோஸ் அணியை சென்னை அணி சந்தித்தது. ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் டெல்லி அணியின் Chicao முதல் கோலை அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். டெல்லி அணி வீரர்களின் நேர்த்தியான தடுப்பு ஆட்டத்தால், சென்னை அணியால் கடைசி வரை கோல் அடிக்க முடியாமல் போனது. இதனால், ஆட்டநேர முடிவில், ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் டெல்லி அணி, சென்னை அணியைத் தோற்கடித்தது. இது, இப்போட்டித் தொடரில் அந்த அணிக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

இதனிடையே, புனேவில் இன்று நடைபெறும் 7-வது லீக் போட்டியில், Pune City அணியும், NorthEast United அணியும் மோதுகின்றன. இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ள இந்தப்போட்டி, ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சியில், தமிழ் வர்ணனையுடன் நேரடியாக ஒளிபரப்பாகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00