ஃபிரான்ஸில் நடைபெற்ற சர்வதேச விமான சாகசப் போட்டி - ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஃபிரான்ஸ் விமானிகள்

Aug 31 2015 8:25AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச விமான சாகசப் போட்டியில், ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் ஃபிரான்ஸ் விமானிகள் சாம்பியன் பட்டம் வென்றனர்.

சர்வதேச விமான சாகச சங்கங்களின் சார்பில், பல்வேறு நாடுகளில் பல கட்டங்களாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சர்வதேச சாம்பியன் பட்டத்திற்கான இந்தப் போட்டிகளில், பல்வேறு நாடுகளின் மிகச்சிறந்த விமானிகள் பங்கேற்று, தங்கள் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்துவர். அந்த வகையில், ஃபிரான்ஸ் நாட்டின் Chatearoux நகரில் இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்திற்கான போட்டிகள் நடைபெற்றன. ஆடவர் மற்றும் மகளிர் என இருபிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டிகளில், ஃபிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 60 விமானிகள் பங்கேற்று சாகசம் புரிந்தது பார்வையாளர்களை வியக்க வைத்தது. விமான சாகசப் போட்டிகளின் முடிவில், ஆடவர் பிரிவில் முதன்முறையாக பங்கேற்ற ஃபிரான்சின் விமானப்படை விமானி Alexandre Orlowski சாம்பியன் பட்டம் வென்றார். மகளிர் பிரிவில், ஏற்கெனவே உலக சாம்பியனாக திகழும் ஃபிரான்ஸ் நாட்டின் Aude Lemordant சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக்கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00