உலக நீச்சல் போட்டியில் அமெரிக்க வீராங்கனை கதே லெடெக்கி 1500 மீட்டர் பிரீஸ்டைல் பந்தயத்தில் புதிய சாதனை படைத்துள்ளார்

Aug 4 2015 1:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலக நீச்சல் சாம்பியன் ஷிப் போட்டி ரஷியாவில் உள்ள கசன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 190 நாடுகளை சேர்ந்த 2,400 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

பெண்களுக்கான 1,500 மீட்டர் பிரீஸ்டைல் பந்தயத்தில் தொடக்க சுற்றில் அமெரிக்க வீராங்கனை கதே லெடெக்கி 15 நிமிடம் 27 குறு நொடிகளில் பந்தய தூரத்தை கடந்து புதிய உலக சாதனை படைத்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நடந்த பான் பசிபிக் சாம்பியன் ஷிப் போட்டியில் கதே லெடெக்கி 15 நிமிடம் 28 குறு நொடிகளில் பந்தய தூரத்தை கடந்ததே உலக சாதனையாக இருந்தது.

1,500 மீட்டர் பிரீஸ்டைல் பந்தயத்தில் கதே லெடெக்கி தனது உலக சாதனையை முறியடிப்பது 4-வது முறையாகும். கதே முந்தைய நாளில் 400 மீட்டர் பிரீஸ்டைல் பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2013-ம் ஆண்டு உலக போட்டியில் கதே முதல்முறையாக உலக சாதனை படைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00