ஜெர்மன் ஓபன் டென்னிஸ் போட்டி : ஆடவர் ஒற்றையர் பிரிவில், இத்தாலி வீரர் Fabio Foginin, ப்ரான்ஸ் வீரர் Benoit Paire ஆகியோர் காலிறுதிக்கு தகுதி
Jul 30 2015 9:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜெர்மன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், இத்தாலி வீரர் Fabio Foginin, ப்ரான்ஸ் வீரர் Benoit Paire ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஜெர்மனியின் Hamburg நகரில் நடைபெற்று வரும் ஜெர்மன் ஓபன் டென்னின் போட்டியில் முன்னணி வீரர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலி வீரர் Fabio Foginin, ஸ்பெயின் வீரர் Albert Ramos-ஐ எதிர்கொண்டார். இதில் Foginin 6-2, 3-6, 6-3 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மற்றொரு ஆட்டத்தில் ப்ரான்ஸ் வீரர் Paire-ஐ எதிர்த்து ஸ்பெயின் வீரர் Tommy Robredo விளையாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் Paire 2-6, 6-3, 7-5 என்ற செட்கணக்கில் வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
காலிறுதிப் போட்டியில் Foginin, பிரிட்டன் வீரர் Alkaz Bedene-யையும், பிரான்ஸ் வீரர் Paire, சகநாட்டு வீரர் Lucas Pouille-யையும் எதிர்த்து விளையாடவுள்ளனர்.