சீனாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் பதக்கம் குவித்த தமிழக மாணவிகள் - விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு சிறப்புத்திட்டங்களை செயல்படுத்தி ஊக்குவித்து வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு வீராங்கனைகள் நெஞ்சார்ந்த நன்றி

Jul 4 2015 7:09AM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் நடைபெற்ற ஆசிய அளவில், பள்ளிகளுக்கு இடையிலான தடகளப் போட்டியில் பல்வேறு பதக்கங்களை வென்ற மாணவ-மாணவிகள் சென்னை திரும்பினர். விளையாட்டுத்துறைக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அளித்து வரும் ஊக்கம் காரணமாகவே, தங்களால் வெளிநாடு சென்று பதக்கம் வெல்ல முடிந்ததாகவும், இதனால், முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் மாணவிகள் தெரிவித்தனர்.

முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா, விளையாட்டுத் துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழகத்தில் இருந்து ஏராளமான விளையாட்டு வீரர்-வீராங்கனைகளை உருவாக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சரின் சிறப்பான நடவடிக்கைகளால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசு, மாநகராட்சிப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சீனாவின் Wuhan நகரில், ஆசிய பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற தடகளப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், வெள்ளிப் பதக்கமும், ப்ரியதர்ஷினி மும்முறை தாண்டும் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவி ராமலெட்சுமி, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப்பதக்கம் வென்றார்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, உத்தரவுப்படி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் வழங்கப்பட்ட மிகச்சிறப்பான பயிற்சிகள் காரணமாகவே, தங்களால் இந்த வெற்றியைப் பெறமுடிந்தது என சீனாவிலிருந்து பதக்கங்களுடன் சென்னை திரும்பிய மாணவிகள் பெருமிதம் தெரிவித்தனர். தாங்கள் சீனா செல்ல நிதியுதவி வழங்கிய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு மாணவிகள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00