காயம் காரணமாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதிக்கு அறுவை சிகிச்சை : உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதில் சிக்கல்
Sep 20 2023 6:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நியூசிலாந்து அணியின் வீரர் டிம் சவுதி காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதால் உலக கோப்பை தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது ஒரு நாள் ஆட்டத்தின்போது நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதிக்கு கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால், அவர் ஆட்டத்தில் இருந்து பாதியிலேயே விலகினார். டிம் சவுதியின் காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அவர் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.