ODI போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் சிராஜ் முதலிடம் : 9வது இடத்தில் இருந்து முதலிடத்திற்கு முன்னேறினார் முகமது சிராஜ்
Sep 20 2023 6:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒருநாள் போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசையில் இந்திய வீரர் சிராஜ் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆசியக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின. அதில், அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்களை முகமது சிராஜ் கைப்பற்றி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். அதனைத்தொடர்ந்து, ODI போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கான ஐசிசி தரவரிசை பட்டியலில் 9வது இடத்தில் இருந்து முகமது சிராஜ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்பாக, கடந்த ஜனவரி மாதம் சிராஜ் முதலிடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.