ஈரான் சென்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவைக் காண குவிந்த ரசிகர்கள் : ரொனால்டோ வந்த பேருந்தை துரத்தியபடி ஓடிய கால்பந்து ரசிகர்கள்
Sep 19 2023 3:24PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரானுக்குச் சென்ற பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை பார்ப்பதற்காக ஏராளமான ரசிகர்கள், அவர் வந்த பேருந்தின் பின்னால் ஓடிய காட்சிகள் வைரலாகி வருகிறது. போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவுதி அரேபியாவின் அல் நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்தநிலையில் ஈரான் தலைநகர் தெஹ்ரான் வந்த ரொனால்டோவின் பேருந்தைச் சுற்றி ரசிகர்கள் திரண்டிருந்தனர். கிறிஸ்டியானோ ரொனால்டோவைக் காண பேருந்தின் பின்னாலேயே ஓடி ரசிகர்கள், அவர் தங்கும் ஹோட்டல் வரை சென்றனர்.