முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய மும்பை சென்ற தோனி : ரிஷப் பந்திற்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவரே தோனிக்கும் சிகிச்சை
Jun 1 2023 3:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முழங்காலில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மும்பை சென்றுள்ளார். காயத்தால் அவதிப்பட்டு வந்த அவர், ஐபிஎல் போட்டி முடிந்த நிலையில், சிகிச்சை பெறுவதற்காக மும்பை புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள கோகிலாபென் மருத்துவமனைக்கு சென்ற தோனிக்கு, ஸ்போர்ட்ஸ் மெடிசின் இயக்குநராக இருக்கும் டின்ஷா பார்டிவாலா அறுவை சிகிச்சை செய்வார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. விபத்தில் சிக்கி படுகாயமடைந்த டெல்லி கேப்டன் ரிஷப் பந்திற்கு அறுவை சிகிச்சை செய்த அதே மருத்துவர் தான் தோனிக்கும் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்கிறார்.