கத்தாரில் உலகக்‍கோப்பை கால்பந்து தொடர் : பிரான்ஸ் - டென்மார்க், அர்ஜென்டினா, மெக்‍சிகோ அணிகள் இன்று மோதல்

Nov 26 2022 2:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய லீக் ஆட்டங்களில் பிரான்ஸ், டென்மார்க்கையும், அர்ஜென்டினா, மெக்ஸிகோவையும் சந்திக்கின்றன. மற்ற இரண்டு ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, துனிஷியாவுடனும், போலந்து, சவுதி அரேபியாவுடனும் மோதுகின்றன.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக்கோப்பை கால்பந்து கத்தாரில் நடைபெற்று வருகிறது. உலகின் தலைசிறந்த 32 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி நாளுக்கு நாள் விறுவிறுப்படைந்து வருகிறது.

டி பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, துனிஷியாவுடன் மோதுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து நடைபெறும் சி பிரிவு ஆட்டம் ஒன்றில் போலந்தும், சவுதி அரேபியாவும் விளையாடுகின்றன. மாலை 6.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. மற்றொரு டி பிரிவு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ், டென்மார்க் அணியை சந்திக்கிறது. இந்தப் போட்டி இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.

சி பிரிவில் நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா, மெக்சிகோவுடன் மோதுகிறது. நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டிகளை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00