உலகக்கோப்பை கால்பந்து போட்டியை காண வரும் ரசிகர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமில்லை : கத்தார் அரசு அறிவிப்பு

Oct 1 2022 10:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக்கோப்பை கால்பந்து போட்டியை காண ரசிகர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமில்லை என கத்தார் அரசு அறிவித்துள்ளது.

22-வது பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 20 ஆம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாகப் பிரிக்கப்பட்டன. உலக கோப்பையை நடத்தும் கத்தார், ஈகுவடார் அணிகள் நவம்பர் 20 ஆம் தேதி மோதுகின்றன. இந்த நிலையில் உலகக்கோப்பை போட்டியை காணவரும் ரசிகர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயமில்லை என கத்தார் அரசு அறிவித்துள்ளது. ஆனால், பாதுகாப்பான சூழலை மீறுபவர்கள் போட்டியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும், கொரோனா தொற்று பரவ தொடங்கினால், வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் பாதுகாப்பு வளையத்திற்கு கொண்டுவரப்படுவார்கள் என்றும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கும் போட்டிக்காக கத்தாருக்கு வரும் 6 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் விமானப் பயணம் மேற்கொள்ளும் முன்னதாக கொரோனா நெகட்டிவ் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00