அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு உரிமம் தற்காலிகமாக ரத்து - சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA அறிவிப்பு

Aug 17 2022 8:10AM
எழுத்தின் அளவு: அ + அ -

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு உரிமத்தை, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

17 வயதுக்‍கு உட்பட்டோருக்‍கான பெண்கள் உலகக்‍ கோப்பை கால்பந்துப் போட்டி இந்தியாவில் வரும் அக்‍டோபர் மாதம் 11-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மஹாராஷ்ட்ரா, கோவா, ஒடிஷா ஆகிய 3 மாநிலங்களில் நடைபெறுவதாக இருந்த போட்டியை, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.

இந்தக்‍ கூட்டமைப்பின் தலைவர் பிரஃபுல் பட்டேல், 12 ஆண்டுகாலம் பதவி வகித்த பின்னர், அவரது பதவிக்‍காலம் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. ஆனால், அதற்கு முன்பாகவே, கடந்த 2017-ல், தனது தலைமையிலான நிர்வாகக்‍ குழுவின் பதவிக்‍காலத்தை நீட்டிக்‍கக்‍ கோரி, பிரஃபுல் பட்டேல், உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்தார். இந்த வழக்‍கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதால், புதிய தலைவருக்‍கான தேர்தலை நடத்தாமல் பிரஃபுல் பட்டேல் காலம் தாழ்த்தி வந்தார்.

இந்நிலையில், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு உரிமத்தை, சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான FIFA தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இதனைத்தொடர்ந்து, 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் வேறு நாட்டிற்கு மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00