ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 51ஆவது லீக் ஆட்டம் : 5 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வென்றது மும்பை அணி

May 7 2022 10:06AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 51ஆவது லீக் ஆட்டத்தில், மும்பை அணி, 5 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை தோற்கடித்து, த்ரில் வெற்றி பெற்றது.

மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 51வது லீக் ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துள்ளது. இஷாந்த் கிஷன் 45 ரன்கள், ரோஹித் சர்மா 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய டிம் டேவிட் 21 பந்துகளில் 44 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான விருத்திமான் சஹா, ஷுப்மான் கில், சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தனர். ஷுப்மான் கில் 52 ரன்களிலும், சஹா 55 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 24 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், குஜராத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது. நடப்பு ஐபிஎல் தொடரில், மும்பை அணி, தான் ஆடிய 10 ஆட்டங்களில், குஜராத் அணியை வீழ்த்தி 2ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00