ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி - 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, 5-வது வெற்றியை பதிவு செய்தது

May 4 2022 8:06AM
எழுத்தின் அளவு: அ + அ -

குஜராத்திற்கு எதிரான லீட் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்க்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 48-வது லீக் ஆட்டம் குஜராத் டைட்டன் மற்றும் பஞ்சாப் கிங்க்ஸ் அணிகளிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரங்களை எடுத்தது. குஜராத் அணியின் தொடக்க வீரர் சாய் சுதர்சன் 50 பந்துகளில் 65 ரன்-களை குவித்தார். பின்னர் 144 ரன்-கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட தொடங்கிய பஞ்சாப் கிங்க்ஸ் அணி வெறும் 16 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி சார்பில் தொடக்க வீரர் ஷிகர் தவான் 62 ரன்-களையும், பனுகா ராஜபக்சா 40 ரன்-களையும் குவித்து வெற்றிக்கு அடித்தளமிட்டனர். 10 போட்டிகளில் 8 வெற்றியை பெற்றுள்ள குஜராத் அணிக்கு இது இரண்டாவது தோல்வியாகும். அதே நேரம் 5 தோல்விகளை கண்டுள்ள பஞ்சாப் கிங்க்ஸ் அணிக்கு இது 5-வது வெற்றியாகும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00