உலக கோப்பை 20 ஓவர் கிரிக்‍கெட் போட்டி : 6 ரன்கள் வித்தியாசத்தில் பங்காளதேஷ் அணியை தோற்கடித்தது ஸ்காட்லாந்து அணி

Oct 18 2021 8:02AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக கோப்பை 20 ஓவர் கிரிக்‍கெட் போட்டியில், 6 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை, ஸ்காட்லாந்து தோற்கடித்துள்ளது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின. இந்த சுற்றில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. அல் அமீரத் நகரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து, பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி, 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கிறிஸ் கிரீவ்ஸ் 45 ரன்கள் அடித்தார். பங்களாதேஷ் சார்பில் மஹதி ஹசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஸ்காட்லாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்து சார்பில் பிராட்லி வீல் 3 விக்கெட்டுளை வீழ்த்தினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00