டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் : 24-ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதல்

Oct 17 2021 1:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

16 அணிகள் பங்கேற்கும் இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது.

ஏழாவது இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக இந்த போட்டி ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, இந்தியாவில் நடைபெறவிருந்த இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், மீண்டும் கொரோனா பரால் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. அதன்படி, 16 அணிகள் பங்கேற்கும் ஐசிசி 20 ஓவர் ஆடவர் கிரிக்கெட் அணிக்கான உலகக் கோப்பை லீக் போட்டிகள் இன்று தொடங்குகிறது. ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் என நான்கு இடங்களில் நவம்பர் 14-ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகின்றன. குரூப் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் 24-ம் தேதி தொடங்குகின்றன. நவம்பர் 8-ந் தேதியுடன் குருப் போட்டிகள் முடிவடைந்தது, 10 மற்றும் 11-ந் தேதிகளில் அரையிறுதி போட்டிகள் அபுதாபி மற்றும் துபாயில் நடக்கிறது. வெற்றியை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி, நவம்பர் 14-ம் தேதி நடக்கிறது. இன்று தொடங்கும் குரூப் சுற்றின் முதலாவது போட்டியில் ஓமன்-பப்புவா நியூகினி அணிகள் மோதுகின்றன. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதும் ஆட்டம் வரும் 24-ம் தேதி நடைபெறுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00