உலக கோப்பை கால்பந்து போட்டி : முதல் அணியாக ஜெர்மனி தகுதி

Oct 13 2021 11:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு, முதல் அணியாக ஜெர்மனி தகுதி பெற்றுள்ளது.

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் கத்தாரில் நடைபெறவுள்ளது. இதில் போட்டியை நடத்தும் கத்தார் தவிர மற்ற 31 அணிகளும் தகுதி சுற்று மூலமே தேர்வாகும். இதையொட்டி தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் ஐரோப்பிய கண்டத்துக்கு மொத்தம் 13 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் மொத்தம் 55 அணிகள் 10 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இவற்றில் இருந்து 13 அணிகள் உலக போட்டிக்கு தகுதி பெறும். இதில் 'ஜெ' பிரிவில் இடம்பெற்றுள்ள ஜெர்மனி அணி, இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, ஒரு தோல்வி என்று 21 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் முதல் அணியாக உலக கோப்பை போட்டிக்கு ஜெர்மனி தகுதி பெற்றது. உலக கோப்பையில், 20-வது முறையாக ஜெர்மனி அணி பங்கேற்பது குறிப்பிடத்தக்‍கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00