கால்பந்து போட்டியை பார்க்க சென்ற பிரசில் அதிபர் பொல்சனேரோவுக்கு அனுமதி மறுப்பு - கொரோனா தடுப்பூசி போடாததால் அதிகாரிகள் நடவடிக்கை

Oct 11 2021 1:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரசில் அதிபர் பொல்சனேரோ கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால், கால்பந்து போட்டியை காண அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

சர்வதேச கொரோனா பாதிப்பில் 3-வது இடத்தில் உள்ள பிரசில், 6 லட்சத்திற்கு மேற்பட்ட உயிரிழப்புகளுடன் கொரோனா பலி எண்ணிக்கையில் 2-வது இடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கிய நிலையில், அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பியுள்ளது. விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சாண்டோஸ் மற்றும் கிரேமியோ கால்பந்து அணிகளுக்கு இடையே லீக் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியைக் காண தடுப்பூசி செலுத்தியோருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தடுப்பூசி செலுத்தாத காரணத்தால் அதிபர் பொல்சனேரோவுக்கு போட்டியைக் காண அனுமதி அளிக்கப்படவில்லை. தொடக்கத்தில் இருந்தே தடுப்பூசி செலுத்த மறுத்து வரும் பொல்சனேரோ, தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், வைரசுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் ஏற்கனவே உள்ளதாக கூறி வருகிறார். தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதை குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ள பொல்சனேரோ, தான் கால்பந்து விளையாட்டை பார்க்க விரும்பிய நிலையில், தடுப்பூசி போட்டிருக்க வேண்டுமென தன்னிடம் கூறப்பட்டதாகவும், தடுப்பூசி தற்போது பாஸ்போர்ட் போல் ஆகிவிட்டது எனவும், தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00