இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி : இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி

Jul 24 2021 10:07AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இதில் முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது.

இந்நிலையில் இந்தியா-இலங்கை மோதும் 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. மழை காரணமாக போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதன்பின், இரு அணிகளுக்கும் 47 ஓவர்கள் மட்டும் நிர்ணயித்து மீண்டும் போட்டி தொடங்கப்பட்டது. இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் இந்திய அணி 43.1 ஓவர்களில் 225 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 49 ரன்களும், சஞ்சு சாம்சன் 46 ரன்களும், சூர்ய குமார் யாதவ் 40 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி சார்பில் தன்ஞ்சயா, பிரவீன் ஜெயவிக்ரமா தலா 3 விக்கெட்களும், துஷ்மந்தா சமீரா 2 விக்கெட்களும், சனகா, கருணாரத்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணியில், தொடக்க ஆட்டக்காரரான அவிஷ்கா அதிரடியாக விளையாடி 76 ரன்கள் குவித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான மினோத் பனூகா 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து விளையாடிய பனூகா ராஜபக்ஷா 65 ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்தார். பின்னர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி, 39 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்து ஆறுதல் வெற்றி பெற்றது.

இதன்மூலம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00