டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தை குறி வைக்கும் கொரோனா - தடகள வீரர்கள் உள்ளிட்ட மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - வீரர்கள் மத்தியில் அச்சம்

Jul 22 2021 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் தங்கியுள்ள 2 தடகள வீரர்கள் உட்பட மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால், வீரர்கள் அச்சமடைந்துள்ளனர்.

சர்வதேச விளையாட்டு திருவிழா என அழைக்‍கப்படும் ஒலிம்பிக் போட்டி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை தொடங்குகிறது. கொரோனா 2வது அலைக்கு மத்தியில் மிகுந்த எச்சரிக்கையுடன் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் பல்வேறு நாடுகளின் விளையாட்டு வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகளை கொரோனா விட்டுவைக்கவில்லை. நேற்று வரை டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், 2 தடகள வீரர்கள் உட்பட மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக ஒலிம்பிக் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். இதனால் ஒலிம்பிக் கிராமத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது. அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ள டோக்கியோவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அங்கு அதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வீரர் - வீராங்கனைகள் மற்றும் போட்டி அமைப்பாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00