உலகின் மிக பிரம்மாண்டமான விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் ஜப்பானில் நாளை தொடக்கம் - போட்டி நடைபெறும் டோக்கியோ நகரம் முழுவதும் விழாக்கோலம்

Jul 22 2021 10:24AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை தொடங்குகின்றன.

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா காரணமாக கடந்த ஆண்டு நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வராத போதிலும், கடந்த ஆண்டு அறிவித்தபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள தேசிய மைதானத்தில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நாளை கோலாகலமாக தொடங்குகின்றன. இதில் ஜப்பான் அரசா் நருஹிடோ உட்பட, உலக நாடுகளைச் சோ்ந்த பல்வேறு முக்கிய தலைவா்கள் பங்கேற்கிறார்கள். கொரோனா காலம் என்பதால் ரசிகர்களுக்கு அனுமதி இன்றி போட்டிகள் நடைபெற உள்ளன. பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நடத்தப்படும் இப்போட்டியில், சுமார் 200 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் அதிகமான போட்டியாளர்கள் களமிறங்க உள்ளனர்.

ஏற்கெனவே, இந்தியாவிலிருந்து 90 போ் கொண்ட முதல் பிரதான குழு டோக்கியோ சென்றடைந்தது. 120-க்கும் அதிகமான போட்டியாளா்கள் உள்பட 220 போ் கொண்ட அணியை, டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இந்தியா அனுப்புகிறது. போட்டி அதிகாரப்பூா்வமாக நாளை தொடங்க இருப்பினும், அணிகள் அளவிலான போட்டிகளின் தொடக்க சுற்றுகள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றன. உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டபோதும், தற்போதைய நிலையில் ஒலிம்பிக் போட்டியுடன் தொடா்புடைய வீரா், வீராங்கனைகள், நிர்வாகிகள், பயிற்சியாளா்கள், உதவிப் பணியாளா்கள் என 75 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படும் நிலையில், போட்டியை ரத்து செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்று சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00