இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், திட்டமிட்ட அட்டவணைப்படி நடத்தப்படும் - கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சவுரவ் கங்குலி தகவல்

Apr 5 2021 10:04AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், திட்டமிட்ட அட்டவணைப்படி நடத்தப்படும் என பி.சி.சி.ஐ. தலைவர் திரு. சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

2021-ம் ஆண்டுக்‍கான ஐ.பி.எல். கிரிக்‍கெட் தொடர் வரும் 9-ம் தேதி, சென்னையில் தொடங்க உள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தை அடைந்துள்ள நிலையில், அதனைக்‍ கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்‍கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மஹாராஷ்டிராவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அதன் விளைவாக, அம்மாநிலத்தில் வார இறுதி ஊரடங்கு அறிவிக்‍கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மஹாராஷ்டிராவில் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கால், ஐ.பி.எல். கிரிக்‍கெட் தொடருக்‍கான அட்டவணையில் மாறுதல்கள் இருக்‍குமா என ரசிகர்களிடையே சந்தேகம் நிலவி வந்தது. அதனைப் போக்‍கும் விதமாக, பி.சி.சி.ஐ. தலைவர் திரு. சவுரவ் கங்கலி இதுகுறித்து விளக்‍கம் அளித்துள்ளார். அதில், ஏற்கனவே, திட்டமிட்ட அட்டவணைப்படி இந்த ஆண்டுக்‍கான கிரிக்‍கெட் தொடர் நடத்தப்படும் என்றும், அதில் எந்தவித மாறுதலும் இருக்‍காது என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக ஐ.பி.எல். போட்டிகளை நேரில் பார்வையிட ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00