உலக டென்னிஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு - அமெரிக்க ஓபன் பட்டம் வென்ற ஜப்பானின் நவோமி ஒசாகா - மூன்றாம் இடத்துக்கு முன்னேற்றம்

Sep 15 2020 12:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

உலக டென்னிஸ் தரவரிசையில் அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, 6 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி முடிவடைந்ததைத் தொடர்ந்து புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 2-வது இடத்தில் ​ஸ்பெயினின் ரஃபேல் நடாலும், அமெரிக்‍க ஓபன் பட்டத்தை வென்ற ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் 3-ம் இடத்திலும் உள்ளனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி நம்பர் ஒன் இடத்திலும், ருமேனியா சிமோனா ஹாலெப் 2-வது இடத்திலும் தொடருகின்றனர். அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்ற ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, 6 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அஸரென்கா, 13 இடங்கள் ஏற்றம் கண்டு 14-வது இடத்தை பெற்றுள்ளார். அரைஇறுதியில் தோல்வி கண்ட செரீனா வில்லியம்ஸ் ஒரு இடம் பின்தங்கி 9-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அரைஇறுதியில் தோற்ற அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடி, 16 இடங்கள் உயர்ந்து 25-வது இடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00