ஐக்‍கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐ.பி.எல்.​ கிரிக்‍கெட் தொடருக்‍கான அட்டவணை வெளியீடு - வரும் 19ம் தேதி, முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதல்

Sep 7 2020 9:43AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19ம் தேதி தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

13வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் 19ம் தேதி தொடங்கி நவம்பர் 10ம் தேதிவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. போட்டித் தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. நவம்பர் 3ம் தேதிவரை மொத்தம் 56 லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இதில் சென்னை சூப்பர் சிங்க்ஸ் அணி 14 லீக் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. அபுதாபியில் வரும் 19ம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30க்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி எதிர்கொள்கிறது. வரும் 22ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடம் மோதும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி அதன்பின்னர், 25ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அக்டோபர் 2ம் தேதி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. அக்டோபர் 4ம் தேதி Kings Eleven பஞ்சாப் அணியுடனும் அக்டோபர் 7ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனும் அக்டோபர் 10ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மோதவுள்ளது.

இதனை தொடர்ந்து அக்டோபர் 13ம் தேதி சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மீண்டும் மோதுகிறது. அதை தொடர்ந்து அக்டோபர் 17ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணியையும் அக்டோபர் 19ம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் அக்டோபர் 23ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியையும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி நவம்பர் 1ம் தேதி நடைபெறும் தனது கடைசி லீக் ஆட்டத்தில் Kings Eleven பஞ்சாப் அணியுடன் பலப்பரிட்சை நடத்துகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00