கிரிக்‍கெட் வீரர் அப்ரிடியை தொடர்ந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கும் கொரோனா தொற்று - டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தினார் மகன் காசிம் கிலானி

Jun 14 2020 10:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரிடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது, அந்நாட்டு முன்னாள் பிரதமர் கிலானிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் கேப்டனுமான சாகித் அப்ரிடி தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதில், கடந்த வியாழக்கிழமை அன்றிலிருந்து தனக்கு கடுமையான உடல் வலி ஏற்பட்டதாகவும், பரிசோதனை செய்து பார்த்ததில் தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும் தான் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்ளுமாறு ரசிகர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் அப்ரிடிக்கு அடுத்ததாக பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ராஸா கிலானிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 67 வயதான கிலானி ஊழல் வழக்கு ஒன்றில் விசாரணைக்கு ஆஜரான பிறகு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை கிலானியின் மகன் காசிம் கிலானி தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00