கொரோனா வைரஸ் தாக்கம் சீராகும் வரை கால்பந்து லீக் போட்டிகளை நடத்த வேண்டாம் - 'ஃபிபா' வேண்டுகோள்

Apr 12 2020 6:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரசின் தாக்கம் முழுமையாக சீராகும் முன்பே அவசரப்பட்டு கால்பந்து லீக் போட்டிகளை தொடங்கி விட வேண்டாம் என்று சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரசின் கோரத்தாண்டவம் விளையாட்டுத் துறையையே புரட்டி போட்டுவிட்டது. 2-3 மாதங்களுக்கு எந்த போட்டிகளும் கிடையாது என்ற நிலைமை உருவாகி உள்ளது. இதனால் கால்பந்து சம்மேளனங்கள் மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. உலக கோப்பைக்கான கால்பந்து தகுதி சுற்று போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கால்பந்து லீக் போட்டிகளை அவசரப்பட்டு தொடங்குவது ஆபத்தாகி விடும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் கியானி இன்பான்டினோ எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கால்பந்து போட்டிகளில் உடல் ஆரோக்கியம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு தான் முதலில் முக்கியத்துவம் அளிக்கிறோம் என கூறினார். மனித உயிரை விட விளையாட்டு பெரிது கிடையாது என கூறிய அவர், அது தான் தங்களது முன்னுரிமை, நோக்கம் என கூறினார். கொரோனாவின் தாக்கம் குறையும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00