கொரோனா வைரஸ் காரணமாக 2ம் உலகப் போருக்கு பிறகு முதன்முறையாக விம்பிள்டன் டென்னிஸ் தொடர் ரத்து - சாம்பியன்ஸ் லீக், யூரோ லீக் கால் பந்தாட்ட போட்டிகளும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு

Apr 2 2020 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் முதன்முறையாக தற்போது கொரோனா அச்சம் காரணமாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. கொரோனா அச்சம் காரணமாக டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் தொடர், பிரான்ஸ் நாட்டில் நடைபெறுவதாக இருந்த French Open Tennis தொடர் ஆகியவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. டென்னிஸ் ஆட்டத்தின் மற்றொரு முக்கிய தொடரான விம்பிள்டன் தொடரும் தற்போது கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 134வது விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். மிகவும் பழமையான விம்பிள்டன் தொடர் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகிறது. 1945-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் காரணமாக விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் 75 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் விம்பிள்டன் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00