தற்காலிக மருத்துவமனையாகும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் வளாகம் : 350 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்ற திட்டம்

Apr 1 2020 4:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்காவில், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால், நியூயார்க்கில் உள்ள அமெரிக்க ஓபன் டென்னிஸ் வளாகம், தற்காலிக மருத்துவமனையாக மாற்றப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி இருக்கிறது.

அமெரிக்காவில், கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் இடம் இல்லாமல், பலர் தவித்து வருகின்றனர். நிலைமை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருப்பதால், உலகின் பல இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பல்களை வரவழைத்து, தற்காலிக மருத்துவமனையாக மாற்ற, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. பூங்கா உள்ளிட்ட பொது இடங்களிலும் அவசர மருத்துவமனைகளை ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நியூயார்க்கில் உள்ள, அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெறும் வளாகத்தை, தற்காலிக மருத்துவமனையாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு, அமெரிக்க டென்னிஸ் சங்கமும் சம்மதம் தெரிவித்துள்ளதால், 350 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக, அமெரிக்க ஓபன் டென்னிஸ் வளாகம் மாற்றப்பட உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00