ஜப்பானில் திட்டமிட்டப்படி ஒலிம்பிக்‍‍ போட்டிகள் நடத்தப்படும் : பிரதமர் ஷின்சோ அபே அறிவிப்பு

Mar 15 2020 10:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

டோக்கியோவில் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உறுதியளித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந் தேதி முதல் ஆகஸ்டு 9-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் ஜப்பான் உள்பட 128 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பீதியால் ஒலிம்பிக்‍ போட்டி நடக்குமா? நடக்காதா? என்று ஒரு பக்கம் விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. ஒலிம்பிக் போட்டியை ஓராண்டு தள்ளிவைக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, டோக்கியோவில் திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உறுதியளித்துள்ளார். திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் என்றும், எந்த தாமதமும் அல்லது ஒத்திவைப்பும் இருக்காது என ஷின்சோ அபே உறுதிப்பட தெரிவித்துள்ளது, ஒலிம்பிக் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00