சாலை பாதுகாப்பு டி20 உலகத் தொடர் - இலங்கை லெஜன்ட்ஸ் அணியை வீழ்த்தியது இந்தியா

Mar 11 2020 7:27AM
எழுத்தின் அளவு: அ + அ -

சாலை பாதுகாப்பு டி20 உலகத் தொடரில், இலங்கை லெஜன்ட்ஸ் அணிக்கு எதிரானப் போட்டியில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா லெஜன்ட்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

சாலை பாதுகாப்பு டி20 உலகத் தொடர், இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் லெஜன்ட்ஸ் அணியை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா லெஜன்ட்ஸ் அணி வீழ்த்தியது. இந்நிலையில் மும்பையில் நேற்று, இந்தியா லெஜன்ட்ஸ் மற்றும் இலங்கை லெஜன்ட்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் சச்சின் டெண்டுலர்கர், இலங்கை லெஜன்ட்ஸ் அணியை பேட்டிங் செய்யும்படி அழைத்தார்.

இதன்படி, முதலில் விளையாடிய இலங்கை லெஜன்ட்ஸ் அணியில், கேப்டன் தில்ஷன், சமரா கபுகேதரா ஆகியோர் அதிகபட்சமாக தலா 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். 20 ஓவர்கள் முடிவில், இலங்கை லெஜன்ட்ஸ் அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. இந்தியா லெஜன்ட்ஸ் தரப்பில், முனாஃப் பட்டேல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா லெஜன்ட்ஸ் அணியில், கேப்டன் சச்சின் டெண்டுல்கர், சேவாக் விரைவில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். இதைத் தொடர்ந்து நிதானமாக ஆடிய முகமது கைஃப், 46 ரன்களில் ஆட்டமிழந்தார். யுவராஜ் சிங் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த இர்ஃபான் பதான், எதிரணி பந்து வீச்சை சிதறடித்தார். கடைசி 2 ஓவர்களில், இந்திய அணி வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. இதை எதிர்கொண்ட இர்ஃபான் பதான், ஹாட்ரிக் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

18 புள்ளி 4 ஓவர்களில், 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து இந்தியா லெஜன்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக, இர்ஃபான் பதான் தேர்வு செய்யப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00