ரசிகர்கள் மத்தியில், விறுவிறுப்பை ஏற்படுத்தியிருக்கும் பெங்களூரு கிரிக்கெட் போட்டி - இந்தியா வெற்றிபெற 287 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

Jan 19 2020 6:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

பெங்களூருவில் நடைபெற்று வரும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்‍கெட் போட்டியில், இந்தியா வெற்றிபெற ஆஸ்திரேலியா 287 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்‍க ஆட்டக்‍காரர்களாக களமிறங்கிய கேப்டன் Aaron Finch, டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். எனினும், இந்திய அணியின் மிகச் சிறந்த பந்துவீச்சால், டேவிட் வார்னர் சொற்ப ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ஆரோன் ஃபிஞ்ச், ரன் அவுட் மூலம் வெளியேறினார். அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் Steven Smith மற்றும் Labuschagne ஜோடி, பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தது.

கேப்டன் ஸ்மித்தின் அபார ஆட்டத்தால், அந்த அணி எளிதாக 300 ரன்களைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 131 ரன்களில் அவர் அவுட் ஆகி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து, மேலும் சில விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்ததால், ஆஸ்திரேலியாவின் ரன் வேகம், கடைசி நேரத்தில் தடைபட்டது. 50 ஓவர் முடிவில், ஆஸ்திரேலியா 286 ரன்கள் எடுத்தது.

தற்போது, இலக்கை எதிர்கொண்டு இந்தியா தனது ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00