கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற மகளிர் கைப்பந்து போட்டி - பார்வையாளர்கள் உற்சாகம்

Sep 13 2014 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சியில், பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற மகளிர் கைப்பந்து போட்டி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு இடையே மகளிர் கைப்பந்து போட்டி, திருச்சியில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இரண்டு நாள் நடைபெற்ற இந்தப் போட்டியில், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 11 கல்லூரி அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டியின் முடிவில், திருச்சி இந்திரா காந்தி கல்லூரி அணியும், பூண்டி புஷ்பம் கல்லூரி அணியும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சையில் ஈடுபட்டன. இரு அணியைச் சேர்ந்த மாணவிகளும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தியதை கண்டு, பார்வையாளர்கள் உற்சாகமடைந்தனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப்போட்டியில், 14க்கு 11 புள்ளி என்ற கணக்கில் திருச்சி இந்திரகாந்தி கல்லூரி அணி முதல் பரிசை கைப்பற்றியது. தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த கல்லூரி அணிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதனிடையே, நீலகிரி மாவட்டம் உதகையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையே மாவட்ட அளவில் நடைபெற்ற கூடைப்பந்துப் போட்டியில், 14 அணிகள் பங்கேற்றன. இருபிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில், ஆடவர் பிரிவில் லெய்ட்லா பள்ளியும், ஜெ.எஸ்.எஸ். பள்ளியும் இறுதிப்போட்டியில் விளையாடின. இதில், 39 புள்ளிகள் பெற்று லெய்ட்லா பள்ளி முதலிடத்தைப் பிடித்தது. இதேபோல், மகளிர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் லெய்ட்லா பள்ளியை எதிர்கொண்ட ஹில்டாஸ் பள்ளி, 35 புள்ளிகள் பெற்று முதல் பரிசை வென்றது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், இருபிரிவுகளிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த அணிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பெண்களுக்கான தடகளப் போட்டி நடைபெற்றது. இதில், 320 மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஒட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று போட்டி போட்டு கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதன் நிறைவில், அனைத்துப் போட்டிகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00