ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் - 50 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் ஜிடு ராய் சாதனை - 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார் ஸ்வேதா சவுத்ரி

Sep 20 2014 11:14AM
எழுத்தின் அளவு: அ + அ -

தென்கொரியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது.

17-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், தென்கொரியாவின் Incheon நகரில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் நேற்று கோலாகலமாகத் தொடங்கின. இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, வட கொரியா, தாய்லாந்து உட்பட ஆசிய கண்டத்தில் உள்ள 44 நாடுகள் பங்கேற்றுள்ளன. 439 பிரிவுகளில் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. இப்போட்டியில், இந்தியா சார்பில் 515 வீரர் - வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இன்று நடைபெற்ற ஆடவருக்கான 50 மீட்டர் Pistol துப்பாக்கிச் சுடும் போட்டியில், இந்தியாவின் Jitu Rai, 186 புள்ளி 2 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதன்மூலம் 17-வது ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் Jitu Rai பெற்றார். இந்தப் போட்டியில், வியட்நாமின் Nguyen Hoang Phuong வெள்ளியும், சீன வீரர் Wang Zhiwei வெண்கலப் பதக்கங்கமும் வென்றனர்.

கிளாஸ்கோ காமன்வெல்த்தில் 50 மீட்டர் 'பிஸ்டல்' பிரிவில் தங்கம் வென்ற ஜித்து ராய், ஸ்பெயினில் உள்ள கிரானடாவில் நடந்த உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் 50 மீட்டர் 'பிஸ்டல்' பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் Jitu Rai வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மகளிருக்கான 10 மீட்டர் Air Pistol துப்பாக்கிச் சுடும் போட்டியில், இந்திய வீராங்கனை Shweta Chaudhary, 176 புள்ளி 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார். இதன்மூலம் Incheon ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை Shweta Chaudhary பெற்றார். இப்போட்டியில், சீனாவின் Zhang Mengyan தங்கமும், தென் கொரியாவின் Jung Jee-Hae வெள்ளியும் பெற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00