உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் வெற்றிக்கோப்பை - பிரசிலை சென்றடைந்தபோது கால்பந்து ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

Apr 23 2014 10:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படவிருக்கும் வெற்றிக்கோப்பை, பிரசிலை சென்றடைந்தபோது கால்பந்து ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.

உலகக் கோப்பைக்கான கால்பந்துப் போட்டிகள், பிரசில் நாட்டில், வருகிற ஜுன் மாதம் 12-ம் தேதி கோலாகலமாக தொடங்கவிருக்கிறது. இப்போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு வழங்கப்படும் வெற்றிக்கோப்பை, கடந்த 9 மாதங்களாக 89 நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. இப்பயணத்தின் தொடர்ச்சியாக பிரசில் நாட்டின் ரியோடிஜெனிரோ நகருக்கு உலகக்கோப்பை நேற்று சென்றடைந்தபோது, கால்பந்து ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர். பிரசில் நாட்டில் அடுத்த 6 வாரங்களுக்கு பல்வேறு நகரங்களில் இந்த கோப்பை பொதுமக்களின் பார்வைக்காக எடுத்துச் செல்லப்படவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் சோ பாலோ நகரில், உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள், ஜுன் மாதம் 12-ம் தேதி தொடங்குகின்றன. உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், அதிகபட்சமாக பிரசில்தான், இதுவரை 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00