பிரேசில் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் 2-ம் இடம் பிடித்த ஆர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் அலெஜான்ட்ரோ சபெல்லாவை அந்நாட்டு அரசு

Jul 24 2014 6:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

பிரேசிலில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை கால்பந்தாட்டப் போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு 24 ஆண்டுகளுக்குப் பிறகு தகுதி பெற்று 2-ம் இடம் பிடித்த ஆர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் அலெஜான்ட்ரோ சபெல்லாவை அந்நாட்டு அரசு கௌரவித்துள்ளது.

20-வது உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகள், பிரேசில் நாட்டில் கடந்த மாதம் 12-ம் தேதி தொடங்கி இம்மாதம் 13-ம் தேதி வரைநடைபெற்று முடிந்தன. 32 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியின் இறுதியாட்டத்திற்கு, ஜெர்மனி - ஆர்ஜென்டினா அணிகள் தகுதி பெற்றன. இதில் அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில், பெனால்டி ஷுட்டில் வெற்றிபெற்ற ஆர்ஜென்டினா, 24 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த முன்னேற்றத்திற்கு அந்த அணியின் பயிறசியாளர் அலெஜான்ட்ரோ சபெல்லா முக்கியக் காரணமாக கருதப்பட்டார்.

இதனையடுத்து, ரியோ-டி-ஜெனிரோவில், நடைபெற்ற இறுதிப்போட்டியில், லட்சக்கணக்கான ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில், ஜெர்மனியும், ஆர்ஜென்டினாவும் பலப்பரீட்சையில் இறங்கின. சமபலம் பொருந்திய இரு அணிகளும் பரபரப்பாக மோதிய இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஜெர்மனி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். எனினும் போட்டிக்கான 90 நிமிட நேரத்திலும், இரு அணிகளும் கடுமையாக போராடியும் கோல் எதுவும் போடாததால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, 113-வது நிமிடத்தில் ஆர்ஜென்டினா அணியினரின் தடுப்புகளை மீறி, ஜெர்மனி வீரர் மாரியோ கோட்ஸ் அபாரமாக கோல் அடித்து ஜெர்மனியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். ஆர்ஜென்டினா 2-ம் இடம் பிடித்தது. ஜெர்மனியுடன் தோல்வியடைந்தபோதிலும், ஆர்ஜென்டினா அணியினர் சிறப்பாக விளையாடியதால், நாடு திரும்பிய அவர்களுக்கு, அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமானம் மூலம் பியுனோஸ் ஏரெஸ் நகருக்கு வந்தடைந்த வீரர்களை, அந்நாட்டு அதிபர் கிறிஸ்டினா ஃபெர்ணான்டஸ் உட்பட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

இந்நிலையில், ஆர்ஜென்டினா அணியை 24 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு அழைத்துச் சென்ற அந்த அணியின் பயிற்சியாளர் அலெஜான்ட்ரோ சபெல்லாவை கௌரவிக்கும் விதமாக, அந்நாட்டு அரசு சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. தலைநகர் பியுனோஸ் ஏரெசில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அலெஜான்ட்ரோ சபெல்லாவின் புகைப்படங்கள், வீடியோவாக திரையிடப்பட்டதுடன், விருதும் Distinction of Honouor என்ற சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00