அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி - ஜோகோவிக் - முர்ரே, செரினா வில்லியம்ஸ் காலிறுதிக்கு தகுதி

Sep 2 2014 5:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், செர்பியாவின் Djokovic-ஐ பிரிட்டனின் Murray எதிர்கொள்கிறார்.

Grand slam போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகின்றது. இதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-ம் சுற்று போட்டியில், உலகின் முதல்நிலை வீரரான செர்பியாவின் Djokovic, ஜெர்மனி வீரர் Philipp Kohlschreiber-ஐ எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-1, 7-5, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில், பிரிட்டனின் Murray, ஃபிரான்ஸின் Jo-Wilfried Tsonga-வுடன் பலப்பரீட்சை நடத்தினர். இதில், 7-5, 7-5, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வெற்றிபெற்று Murray காலிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். காலிறுதி ஆட்டத்தில் Djokovic-ஐ, Murray எதிர்கொள்கிறார்.

இன்னொரு போட்டியில், 3-ம் நிலை வீரரும், சுவிட்சர்லாந்தை சேர்ந்தவருமான Wawrinka 7-5, 4-6, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் Tommy Robredo-ஐ வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில், உலகின் முதல்நிலை வீராங்கனையான அமெரிக்காவின் Serena Williams, எஸ்டோபியா வீராங்கனை Kaia Kanepi-ஐ 6-3, 6-3 என்ற நேர்செட் கணக்கில் எளிதாக வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் 7-ம் நிலை வீராங்கனையான கனடாவின் Bouchard, ரஷியாவின் Makarova-விடம் 7-6 (7-2), 6-4 என்ற செட்களில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

இன்னொரு ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை Azarenka, 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் செர்பியாவின் Krunic-ஐ வென்றார். காலிறுதியில் Makarova-வும், Azarenka-வும் மோதுகிறார்கள்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00