ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிவாலயங்களில் பூஜை : சிறப்பு அபிஷேகம், தீபாரதனையில் திரளானோர் பங்கேற்பு

Jan 10 2020 8:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகம் முழுவதும் பல்வேறு சிவன் கோவில்களில் திருவாதிரையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடைபெற்றன.

சென்னை மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனம் நிகழ்வில், திரளான பக்‍தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நடராஜ பெருமானுடன் சிவகாமி அம்பாள் எழுந்தருளி பக்‍தர்களுக்‍கு காட்சியளித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் ஆலயத்தில், நடராஜ பெருமாளுக்‍கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து சுவாமியின் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், சிவகாமி சமேத நடராஜ பெருமான் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி, பக்‍தர்களுக்‍கு காட்சியளித்தார். தொடர்ந்து, திருமஞ்சன கோபுர வாயில் வழியாக, கோயிலை சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார்.

திருச்சி திருவானைக்‍காவல் ஜம்புகேசுவரர் கோயிலில், ஆரூத்ரா தரிசனத்தையொட்டி, நடராஜர் பெருமான் சிறப்பு அலங்காரத்துடன் சிவகாமி அம்பாள் மற்றும் பரிகார மூர்த்திகளுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருவாரூர் தியாகராஜ சுவாமி ராஜநாராய மண்டபத்திற்கு எழுந்தருளியதை தொடர்ந்து, பால், தயிர் மற்றும் நறுமண பொருட்களால், சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி, தனது வலது திருபாதத்தை பக்‍தர்களுக்‍கு காண்பித்து அருள்பாலித்து வருகிறார்.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், பாறைகளால் செதுக்கப்பட்ட நடராஜர் சிலைக்கு, சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் செய்யப்பட்டன. தொடர்ந்து உற்சவரான நடராஜர் மூர்த்தி, மலையைச் சுற்றி கிரிவலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த திருஇலம்பையன் கோட்டூர் பகுதி தெய்வநாயகேஸ்வரர் திருக்‍கோயிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு 36 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

வேலூர் கோட்டையில் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில், நடராஜருக்‍கு 21 வகையான பொருட்களைக்‍ கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தில் அமைந்துள்ள வாலீஸ்வரர் ஆலயத்தில், ஆருத்ரா தரிசன பெருவிழா விமரிசையாக நடைபெற்றது. ஆனந்த நடராஜப் பெருமானுக்கு பால், தயிர், திரவியப்பொடி, பழ வகைககள் மற்றும் பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை மங்கள நாதர் ஆலயத்தில், மரகத நடராஜருக்‍கு சந்தனக்காப்பு அகற்றப்பட்டு, அபிஷேக ஆராதனைகள் நடந்தன. 24 பரதநாட்டிய குழுவினர் பங்கேற்ற நாட்டியாஞ்சலி, பக்‍தர்களை வெகுவாக கவர்ந்தது.

சென்னை மண்ணடியில் மல்லிகேஸ்வரர், கச்சாலீஸ்வரர், காளிகாம்பாள் உள்ளிட்ட 9 ஆலயங்களில் இருந்தும், நவ நடராஜர்கள் எழுந்தருளி காட்சியளித்தனர். நாதஸ்வரம், சங்கநாதம், கயிலாய வாத்தியங்கள்முழங்க, பக்தர்கள் திருவாசகம் பாடினர். சிவன், பார்வதி, காளி, நரசிம்மன் வேடமணிந்த பக்தர்கள், வாத்தியங்களுக்கு ஏற்றபடி நடனம் ஆடினர்.

இதனிடையே, நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள பவானீஸ்வரர் ஆலயத்தின், தேர்திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. அப்போது பாரம்பரிய உடை அணிந்த தோடர் இன மக்‍கள், நடனமாடி காட்சி அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00