திருப்பதி கோவிலிலிருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை

Dec 8 2019 6:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பதி கோவிலிலிருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை இன்று வழங்கப்பட்டது.

கி.பி 1320 முதல் 1370 வரையிலான ஆண்டுகளில் படையெடுப்பின்போது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சூறையாடப்பட்டநிலையில், நம்பெருமாள் திருப்பதி திருமலையில் சுமார் 50ஆண்டுகாலம் எழுந்தருளியிருந்தார். இதனை நினைவுகூறும்வகையில் 108வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாதும், பூலோகவைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திற்கு ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஆண்டு தோறும் கைசிக ஏகாதசியன்று வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமிக்கும், உற்சவர் நம்பெருமாளுக்கு பட்டு வஸ்திரங்கள் மற்றும் அரங்கநாயகி தாயாருக்கு பட்டு புடவைகள் மாலை மற்றும் மங்களப் பொருட்கள் கொண்டு வரப்பட்டது. முன்னதாக நம்பெருமாளுக்கான வஸ்திரங்கள் யானை மீது வைத்து கோவில் வளாகத்திலிருந்து புறப்பட்டு உள்பிரகாரங்களில் வலம் வந்து கோவிலை அடைந்தது. இதில் அறநிலையத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகிகள், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00