ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்த சுவாமிகளிடம், கட்டளைத்தம்பிரான் சுவாமிகள் ஆசிபெறும் நிகழ்வு

Dec 6 2019 10:17AM
எழுத்தின் அளவு: அ + அ -

தருமபுர ஆதீனத்தின் புதிய மடாதிபதியாக பொறுப்பேற்க உள்ள ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்த சுவாமிகளிடம், கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் ஆசிபெறும் ஆதீன மரபு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் உள்ள பழைமைவாய்ந்த சைவ ஆதீன மடத்தின் 26-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் நேற்று முன்தினம் முக்தியடைந்தார். அவரது இறுதி நல்லடக்கம் ஞானகுருமூர்த்த தோட்டத்தில் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து புதிய மடாதிபதியாக பதவியேற்க உள்ள இளையமடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்த சுவாமிகள் மடத்திற்கு எழுந்தருளினார். ஆதீன மரபுப்படி, மடத்தில் உள்ள ஆலயங்களில் தரிசனம் செய்தார். தொடர்ந்து மடத்தின் கீழ் உள்ள கட்டளைத் தம்பிரான்கள், ஆதீன திருக்கூட்ட அடியார்கள், அவரிடம் ஆசி பெற்றனர். இந்து அறநிலைய ஆட்சித்துறை அதிகாரிகள், திருவாவடுதுறை ஆதீன கட்டளைத்தம்பிரான் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். ஆதீன மரபுப்படி, இன்னும் பத்து தினங்களுக்கு ஆதீனத்தின் வழக்கமான பூஜைகளை, திருப்பனந்தாள் காசிமடத்து எஜமான் சுவாமிகள் மேற்கொள்ளுவார். அதன்பிறகு, புதிய மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்த சுவாமிகள் பட்டமேற்பார் என்று கூறப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00