திருக்கார்த்திகை தினத்தின் 5-ம் நாள் உற்சவம் : வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமிகள் பவனி

Dec 6 2019 10:09AM
எழுத்தின் அளவு: அ + அ -

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 5-ம் நாள் இரவு உற்சவத்தையொட்டி, தமிழகத்திலேயே மிக உயரமான மற்றும் பழமைவாய்ந்த வெள்ளி ரிஷப வாகனத்தின் மீது, அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் மாடவீதிகளில் பவனி வந்தனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. 5ம் நாளான நேற்றிரவு, உற்சவத்தில் அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன், பராசக்திஅம்மன், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு திருக்கோவிலின் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் வலம்வந்த பஞ்சமூர்த்திகள் ராஜகோபுரம் முன்புள்ள 16 கால்மண்டபத்தில், தமிழகத்திலேயே மிக உயரமான சுமார் 32 அடி உயரம் கொண்ட பழமையான வெள்ளி ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் எழுந்தருளினார். இதேபோல் வெள்ளி ரிஷப வாகனத்தில் பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஷ்வரரும், வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர், வெள்ளி மயில் வாகனத்தில், முருகரும் எழுந்தருளி காட்சியளித்தனர். இதனைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக நான்கு மாட வீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00