பக்தர்கள் என்ற போர்வையில், நகர்ப்புற நக்சலைட்டுகள் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வருகின்றனர் - வெளியுறவுத் து‌றை இணை அமைச்சர் வி.முரளீதரன் தகவல்

Nov 18 2019 10:42AM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, பக்தர்கள் என்ற போர்வையில், நகர்ப்புற நக்சலைட்டுகள், சமூக விரோதிகள் உள்ளிட்டோர், தற்போது சென்று வருகின்றனர் என்று, வெளியுறவுத் து‌றை இணை அமைச்சர் திரு. வி.முரளீதரன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை‌, அண்மையில் மண்டல பூ‌ஜைகளுக்காக திறக்கப்பட்டது. இதையடுத்து, சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்ய, சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

சபரிமலை விவகாரம் குறித்து, டெல்லியில், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த, பா.ஜ.க.,வைச் சேர்ந்த, வெளியுறவுத் துறை இணை அமைச்சர், திரு. வி. முரளீதரன், சபரிமலை ஐயப்பன் ‍கோவிலுக்கு, பக்தர்கள் என்ற போர்வையில், நகர்ப்புற நக்சலைட்டுகள், சமூக விரோதிகள், நாத்திர்கள் தற்போது சென்று வருகின்றனர் என்றும், இவர்கள் உண்மையான ஐயப்ப பக்தர்களா என்பது குறித்து, விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

சபரிம‌லை விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றுக் குறிப்பிட்ட அவர், சபரிமலை கோவிலின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் மனநிலையாக உள்ளதாகவும், இதன் அடிப்படையிலேயே சில அழுத்தங்களுடன் கேரள மாநில அரசு செயல்பட்டு வருவதாகவும், அமைச்சர் திரு. வி.முரளீதரன் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00