மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு : பக்தர்களுக்கு அனுமதி - பாதுகாப்பு பணியில் போலீசார் குவிப்பு

Nov 17 2019 5:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

மகர விளக்கு மற்றும் மண்டல பூஜைகளுக்காக சபரிமலை கோவிலின் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து மண்டல பூஜைக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை மற்றும் மகர விளக்கையொட்டி, நேற்று மாலை 5 மணிக்கு தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகளுடன் சபரிமலை கோவிலின் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, 18 படிகளுக்கு படி பூஜை நடத்தப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 41 நாட்களுக்கு நிர்மால்ய பூஜை, சந்தன-நெய் அபிஷேகம் லட்சார்ச்சனை உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெறும். மண்டல பூஜை அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெறவுள்ளது.

மண்டல பூஜைக்காக பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு வருவர் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சபரிமலை கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு பம்பை, நிலக்கல், சன்னிதானம் பகுதிகளில் குடிநீர், கழிப்பறை, மருத்துவர்கள் குழு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00