திருவண்ணாமலை தீப திருவிழாவையொட்டி 2,500 சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்‍கை - பாதுகாப்புப் பணியில் 8,500 போலீசாரை ஈடுபடுத்த ஏற்பாடு

Nov 14 2019 7:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலை தீப திருவிழாவிற்காக, 2,500 சிறப்பு பேருந்துகள் மற்றும் 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா வரும் டிசம்பர் மாதம் 1-ம் தேதி தொடங்கவுள்ளது. டிசம்பர் 10-ம் தேதி அதிகாலையில் அண்ணாமலையார் கருவறையில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். இந்த கார்த்திகை தீப திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், ஆட்சியர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேவூர்.ராமசந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, பேசிய அமைச்சர் சேவூர்.ராமசந்திரன், தீப திருவிழாவிற்காக, 2,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், கிரிவலப்பாதைக்கு செல்ல 125 இலவச மினி பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு வர 14 சிறப்பு இரயில்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பக்தர்களின் பாதுகாப்புக்காக 8,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00