மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கியது - நாள்தோறும் 20 ஆயிரம் லட்டுகள் வழங்க ஏற்பாடு

Nov 8 2019 1:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு கடந்த தீபாவளி முதல் இலவச லட்டு பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் சில காரணங்களால் இத்திட்டம் தள்ளிப்போனது. இந்நிலையில் இலவச லட்டு பிரசாதம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் முதலமைச்சர் இதனை தொடங்கி வைத்தார். மதுரை தெற்காடி வீதியில் பிரத்யேக எந்திரம் மூலம் லட்டு தயாரிக்கப்பட்டு வருகிறது. திட்டம் அறிமுகமாகியிருப்பதை அடுத்து, முதல்கட்டமாக 20 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தை பக்‍தர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00