சிரியா போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை தொடங்கவேண்டும் : போப் பிரான்ஸிஸ் வலியுறுத்தல்

Oct 14 2019 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

சிரியாவில் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும் என போப் பிரான்ஸிஸ் வலியுறுத்தியுள்ளார்.

Vatican சிட்டியில் நேற்று நடைபெற்ற விழாவில் கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி Mariam Theresia Chiramel Mankidiyan-ஐ புனிதராக, போப் பிரான்ஸிஸ் அறிவித்தார். Mariam Theresia-வுடன் இங்கிலாந்தைச் சேர்ந்த கர்தினால் John Henry Newman சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி Marguerite Bays, பிரேசில் கன்னியாஸ்திரி Duice Lopes, இந்தாலியைச் சேர்ந்த கன்னியாஸ்திரி Giuseppina Vannini ஆகியோரும் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.

கடந்த 1914ம் ஆண்டு கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள புத்தன்சிராவில் கன்னியாஸ்திரியாக வாழ்க்கையைத் தொடங்கிய Mariam Theresia, 100 ஆண்டுகளில் புனிதராக உயர்த்தப்பட்டுள்ளார். Vatican சிட்டியில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.வி. முரளிதரன், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி திரு.ஜோசப் குரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கத்தோலிக்க திருச்சபையில் ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்க, அவரது மரணத்திற்கு பிறகு இரண்டு அதிசயங்களை நிகழ்த்தி இருக்கவேண்டும். அதன்படி இரண்டு பேரின் தீராத நோயை தீர்த்து வைத்து கன்னியாஸ்திரி Mariam Theresia அதிசயம் நிகழ்த்தினார். இதனை போப் பிரான்ஸிஸ் ஏற்றுக்கொண்டு அவருக்கு புனிதர் பட்டம் வழங்கினார்.

இந்த புனிதமான நிகழ்வின் மூலம் கேரளாவில் உள்ள நூற்றாண்டுகள் மரபு கொண்ட சிரியோ - மலபார் தேவாலயத்தில் புனிதராக உயரும் நான்காவது கன்னியாஸ்திரி Mariam Theresia ஆவார். கடந்த மாதம் ஒளிபரப்பான 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் கன்னியாஸ்திரி Mariam Theresia-க்கு பிரதமர் திரு.நரேந்திரமோடி புகழாரம் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்த விழாவில் பேசிய போப் பிரான்ஸிஸ், சிரியாவில் நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும் என போப் பிரான்ஸிஸ் வலியுறுத்தியுள்ளார்.

புனிதர் Mariam Theresia, மதம் சார்ந்த பணிகள் மட்டுமின்றி, சமூக சேவையில் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார். கேரளாவில் பெண் கல்விக்காக அதிகம் பாடுபட்டார். இரண்டு பள்ளிகள், மூன்று கான்வென்டுகள், ஒரு ஆதரவற்ற இல்லத்தை தொடங்கி நடத்தி வந்த Mariam Theresia, கடந்த 1926ம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் தேதி, தனது 50 ஆவது வயதில் மறைந்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00