விஜயதசமியையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு - குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் "வித்யாரம்பம்" நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு

Oct 8 2019 5:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

விஜயதசமியையொட்டி, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில், குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் "வித்யாரம்பம்" நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பெற்றோர்கள், தங்களது குழந்தைகளுக்‍கு பச்சரிசி மற்றும் நெல்லில் அகரம் எழுதக்‍ கற்றுக்‍கொடுத்தனர்.

விஜயதசமியையொட்டி, தமிழகத்தின் பல்வேறு கோயில்களில், சிறப்பு வழிபாடு மற்றும் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் "வித்யாரம்பம்" நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள மழலையர் பள்ளியில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பூஜைகள் செய்து பள்ளியில் சேர்த்தனர். குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்தும், மடிமீது அமரவைத்தும், அரிசியில் "அ" என்ற அகர எழுத்தை கைப்பிடித்து எழுதி பாடங்களை தொடங்கி வைத்தனர்.

விஜயதசமியையொட்டி, கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில், வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தைகளுக்கு நவதானியங்களான நெல், துவரை, உளுந்து, பச்சை பயறு, மொச்சை, எள், கோதுமை, கொண்டை கடலை, கொள்ளு ஆகியவற்றில் தமிழின் முதல் எழுத்தான "அ"-வை எழுதி, ஆசிரியர்கள் கல்வியை தொடங்கி வைத்தனர்.

மும்மூர்த்திகள் ஸ்தலமாக விளங்கும் திருச்சி உத்தமர் கோவிலில் உள்ள சரஸ்வதி தேவி சன்னதியில், நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கானோர் தங்களது குழந்தைகளுடன் கலந்துகொண்டனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு ஞானம் மற்றும் பேச்சாற்றலில் சிறந்து விளங்க சரஸ்வதி அம்மனின் அருளை வேண்டி பிரார்த்தனை நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் உள்ள மகாசரஸ்வதி அம்மன் ஆலையத்தில், அக்‍ஷராபியாசம் எனும் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை நாவில், தேனால் எழுதும் நிகழ்ச்சியில், பெருந்திரளான பக்‍தர்கள் கலந்துகொண்டனர்.

விஜயதசமியை முன்னிட்டு புதுச்சேரிலட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் எனும் கல்வி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பெற்றோர்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் திருக்கோவிலில், விஜயதசமியை முன்னிட்டு புதிதாக பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு, வித்யாரம்பம் என்ற கல்வி துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் சுவாமிக்கு முன்பு ,நெல் பரப்பி வைக்கப்பட்டு, பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கையைப் பிடித்து, அகரம் எழுதி, கல்வியை துவக்கி வைத்தனர்.

தூத்துக்குடியில் உள்ள கலைமகள் ஆலயத்தில் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. அரிசியில் மஞ்சளைக்‍ கொண்டு குழந்தைகளை எழுத வைக்கும் நிகழ்ச்சியில், ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு எழுத்தறிவித்து பள்ளியில் சேர்த்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் ஸ்ரீ வனமாளீஸ்வரா கோவிலில் உள்ள சரஸ்வதி சன்னிதானத்தில், கோவில் குருக்கள் தங்க ஊசியால் குழந்தைகளின் நாவிலும், பச்சரிசியிலும் அகர முதல எழுத்துகளை எழுதச் செய்து குழந்தைகளின் கல்வியை தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பெற்றோர்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00