நவராத்திரி விழா - கொலு பொம்மைகள் விற்பனை : ரூ.600 முதல் ரூ.2,000 வரை பொம்மைகள் விற்பனை

Sep 18 2019 9:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

நவராத்திரி விழாவுக்காக கொலு பொம்மைகளின் விற்பனை தூத்துக்குடியில் தொடங்கியது. பல்வேறு வகையான சாமி பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

துர்க்‍கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று இறைசக்திகளும் ஒன்று சேர்ந்து மகிஷாசுர மர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை அழிப்பதை குறிக்‍கும் நவராத்திரி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மைசூரில் தசரா என்றும், மேற்குவங்கத்தில் துர்க்கா பூஜை என்றும், தமிழ்நாட்டில் சரஸ்வதி பூஜை, விஜயதசமி என்றும் கொண்டாடப்படுகிறது.

நவராத்திரி விழாக்கான கொலு பொம்மைகள் விற்பனை மற்றும் கண்காட்சி தூத்துக்குடி சர்வோதயா சங்கம் சார்பில் தொடங்கியது. முருகன், விநாயகர், ராமர், மீனாட்சி, லட்சுமி, சரஸ்வதி, கிருஷ்ணர், தசாவதார மூர்த்திகள், சிவன், பார்வதி, காளி உள்ளிட்ட பல்வேறு கொலு பொம்மைகள் வைக்‍கப்பட்டுள்ளன. சென்னை, காஞ்சிபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கடலூர், உள்ளிட்ட இடங்களில் இருந்தும், மகாராஷ்ட்ரா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் கொலு பொம்மைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. கொலு பொம்மை 600 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00