திருச்சியில் முத்தாலம்மன் கோயில் திருவிழா : மாலை தாண்டுதல் போட்டி - நூற்றுக்கணக்கான காளைகள் பங்கேற்பு

Sep 11 2019 2:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நடைபெற்ற மாலை தாண்டுதல் போட்டியில் நூற்றுக்கணக்கான காளைகள் பங்கேற்று பார்வையாளர்களை பரவசப்படுத்தின.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கொட்டப்பட்டி போர்நாயக்கனூரில் உள்ள முத்தாலம்மன், மாரியம்மன் கோயிலில் ஆவணி மாத திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான எருது ஓட்டம் எனும் மாலை தாண்டுதல் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

கோவில் முன்பு 14 மந்தைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான காளைகள் முறைப்படி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, புனிதநீர் தெளிக்கப்பட்ட பின்பு கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் காளைகள் அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து அனைத்து காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன.

அப்போது காளைகள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக் கொண்டு ஓடின. இதில் வெற்றி பெற்ற முதல் காளையின் மீது மஞ்சள் பொடி தூவப்பட்டது. மிகவும் விமரிசையாக நடைபெற்ற இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00