நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்திவிழா இன்று கோலாகல கொண்டாட்டம் - கோவில்களில் மக்கள் தரிசிப்பதோடு, வீடுகளிலும் சிலை வைத்து வழிபாடு

Sep 2 2019 11:03AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திரமோடி நாட்டு மக்‍களுக்‍கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விநாயகர் அவதரித்த நாளையே நாம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. அதன்படி விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிகாலை முதலே விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. மேலும், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன. சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. கற்பக விநாயகர் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மஹாராஷ்ட்ர மாநிலம் மும்பை உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அங்குள்ள விநாயகர் கோயில்களில் காலை முதலே ஏராளமானோர் தரிசனம் செய்து வருகின்றனர்.

பிரதமர் திரு. நரேந்திரமோடி, இதையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். கணேஷ் சதுர்த்தி என்ற புனித விழாவிற்காக நாட்டு மக்கள் அனைவருக்‍கும் நல்வாழ்த்துகளை தெரிவிப்பதாக அவர் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00