காஞ்சிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற அத்திவரதர் வைபவம் நிறைவு - அனந்த சரஸ் குளத்திற்கு இன்று மீண்டும் சயன கோலத்திற்கு செல்லும் அத்திரவரதர்

Aug 17 2019 10:27AM
எழுத்தின் அளவு: அ + அ -

காஞ்சிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற அத்திவரதர் வைபவம், நிறைவடைந்தது. சயன கோலத்திலும், நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்த அத்திவரதர், இன்று மீண்டும் அனந்த சரஸ் குளத்தில், சயன கோலத்திற்கு செல்கிறார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் வைபவம் நடைபெறும். 1979ஆம் ஆண்டு அத்திவரதர் வைபவம் நடைபெற்றது. அதன்பின்னர் 40 ஆண்டுக்‍குப் பிறகு கடந்த ஜூலை 1ஆம் தேதி அத்திவரதர் தரிசனம் தொடங்கியது. ஜூலை 31ஆம் தேதி வரை சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து இறுதி நாளான நேற்று வரை, நின்ற கோலத்திலும் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடைசி நாளான நேற்று 5 லட்சம் மக்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், லட்சக்கணக்கானவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இறுதி நாளான நேற்று, விஐபி விவிஐபி தரிசனம் கிடையாதென மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்த நிலையில், போலீசார், தங்கள் குடும்பத்தினரையும், வேண்டப்பட்டவர்களையும் விவிஐபி தரிசனத்தில் அனுமதித்ததால், பல மணி நேரம் காத்திருந்த பக்தர்கள், சிரமத்திற்கு உள்ளாகினர். கடந்த 47 நாட்களில் ஒரு கோடியே 10 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். வைபவத்தின் 48ஆவது நாளான இன்று, மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் அத்திவரதர் ஆனந்த சயன நிலைக்‍கு செல்கிறார். இனி 40 வருடங்கள் கழித்து 2059ஆம் ஆண்டு அத்திவரதரை தரிசிக்க முடியும்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00